சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ஐந்து வாகனங்கள் கண்டுபிடிப்பு

சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ஐந்து வாகனங்கள் கண்டுபிடிப்பு

சட்டவிரோதமாக வாகனங்கள் இணைக்கப்பட்ட மூன்று இடங்களில் சோதனை நடத்தி, 700 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதி வாய்ந்த ஐந்து சொகுசு வாகனங்களை வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

இரத்தினபுரி கலவான பிரதேசத்தில் சட்டவிரோதமாக வாகனங்கள் இணைக்கப்பட்டு போலி ஆவணங்களுடன் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கலவான பொலிஸ் நிலையத்தில் இரண்டு பொலிஸ் குழுக்கள் சோதனை மேற்கொண்டுள்ளன.

குறித்த வாகனங்களின் இயந்திர எண்கள் போலியாக தயாரிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்தும் போது அவர் மயங்கிய நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமாக வாகனங்களை இணைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுவதால், கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வலானா மத்திய ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Share This