518 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில்

518 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்றது. அவுஸ்திரேலிய அணி தமது முதல் இன்னிங்சில் 6 விக்கட் இழப்பிற்கு 654 ஓட்டங்களை பெற்றது.

உஸ்மன் கவாஜா 232 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 141 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் நேற்றைய ஆட்டநாள் முடியும்வரை 5 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களை பெற்றிருந்தது. அதிகபட்சமாக தினேஸ் சந்திமால் 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

518 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி உள்ளது. இன்றைய தினம் நான்காம் நாள் ஆட்டம் இடம்பெற உள்ளது. நேற்றைய தினம் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் இடைநிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share This