துப்பாக்கிச் சூடு – மூவர் பலி

துப்பாக்கிச் சூடு – மூவர் பலி

காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், உயிரிழந்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது​.

சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share This