சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு அவசர தீர்வுகள் வழங்கப்படும்

சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு அவசர தீர்வுகள் வழங்கப்படும்

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு அவசர தீர்வுகள் வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

புறக்கோட்டை மத்திய பேருந்து வளாகத்தில் நடைபெற்ற விசேட கண்காணிப்பு விஜயத்தின்போதே பிரதி அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், அதன் அடுத்த கட்டமாக சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாகவும் எதிர்வரும் பெப்ரவரி மாத்திற்குள் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This