மியன்மார் பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான மியன்மார் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான பிரிகேடியர் ஜெனரல் சாவ் மோ எல்வின் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜனவரி 28 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இராணுவத் தளபதியுடனான கலந்துரையாடலின் போது, நாட்டின் நலனுக்காக நாடு தழுவிய அளவில் இராணுவம் செய்த பங்களிப்புகளுக்கு பாதுகாப்பு இணைப்பாளர் தனது பாராட்டை தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நேர்மறையான உறவை நினைவு கூர்ந்த அதே வேளையில், எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இராணுவ தளபதி எடுத்துரைத்தார். நினைவுப் பரிசுகள் பரிமாற்றத்துடன் சந்திப்பு நிறைவடைந்தது.