அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு எதிராக அபராதம்

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு எதிராக அபராதம்

உள்நாட்டு வெள்ளை பச்சையரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நேற்று (27) மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்தது.

குறித்த பல்பொருள் அங்காடியில் உள்நாட்டு வெள்ளை பச்சையரிசி கிலோ ஒன்று 255 ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பில் கம்பஹா மாவட்ட நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய உண்மைகளின்படி, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த தினங்களில் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிரான வழக்குகளுக்காக நீதிமன்றம் 3 மில்லியனுக்கும் அதிகமான தொகையை அபராதமாக விதித்துள்ளதாக அதிகாரசரப கூறுகிறது.

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையானது அண்மைய தினங்களில் 140 சுற்றிவளைப்புகளுக்கு மேல் மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களிலும் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This