இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது உப்புத் தொகை

இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது உப்புத் தொகை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் அடங்கிய முதலாவது உப்புத் தொகை இன்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உப்பு உற்பத்தியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

எனவே, நாட்டின் உப்பு நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான உப்பு இல்லாமையால், 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

உப்பை பொது நுகர்வுக்காக நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This