84 நெற் களஞ்சியசாலைகளில் தூய்மையாக்கல் பணிகள் நிறைவு

84 நெற் களஞ்சியசாலைகளில் தூய்மையாக்கல் பணிகள் நிறைவு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் இலங்கை முப்படைகளின் சேனாதிபதியமான அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிக்காட்டலுக்கமைய தற்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் “தூய இலங்கை” தேசிய திட்டத்திற்கு அமைய இம் முறை பெரும்போக நெல் அறுவடை அரசாங்கத்தினால் கொள்முதல் திட்ட செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமையால், அந்த நெல் கொள்முதல் செய்த பின் நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபையின் நெல் களஞ்சியசாலைகளில் சேமிப்பதற்கு அரசினால் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியங்கள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்த ஏற்றதாக மாற்றவும், சிறிய பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளவும் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளதுடன், தேசியத் தேவைக்காக பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவை வழங்குவதற்காக, பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தல்களின்படி மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜனவரி 18 முதல் 27 வரை அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களாலும் நாடு முழுவதும் களஞ்சியங்கள் சுத்தம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அந்தத் திட்டத்திற்கு இணங்க, 27.01.2025 ஆம் திகதிக்குள், இராணுவப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மேற்பார்வையின் கீழ், இராணுவ படையினர் 84 நெல் சேமிப்பு களஞ்சியசாலைகளை சுத்தம் செய்து பயன்படுத்தக்கூடிய நிலைக்கு மீட்டமைக்க மனிதவளத்தை வழங்கியது.

இந்த திட்டம் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டகளப்பு, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, கொழும்பு, குருநாகல், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Share This