உலகிலேயே பெறுமதி வாய்ந்த மூங்கில் உப்பு பற்றித் தெரியுமா?

உலகிலேயே பெறுமதி வாய்ந்த மூங்கில் உப்பு பற்றித் தெரியுமா?

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுமளவுக்கு சாப்பாடு ருசிக்க உப்பு மிகவும் அவசியம். அந்த வகையில் உலகிலேயே மிகவும் விலையயுர்ந்த உப்பு எது தெரியுமா?

கொரிய நாட்டைச் சேர்ந்த மூங்கில் உப்பு தான் உலகிலேயே விலை அதிகம் உள்ள உப்பு.

இதனை அந் நாட்டு மக்கள் மிகவும் பாரம்பரியமானதாக கருதுகின்றனர். இது சமையலுக்காக பயன்படுவதோடு மட்டுமில்லாமல் பல நோய்களையும் தீர்ப்பதாக கூறப்புடுகிறது.

ஏனைய உப்பை போல இலகுவாக இவற்றை தயார் செய்துவிட முடியாது. இதனை 9 தடவைகள் பதப்படுத்துகிறார்கள். முதலில் சாதாரண உப்பு மூங்கில் கட்டைகளுக்குள் வைக்கப்பட்டு மஞ்சள் நிறத்தினால் களிமண்ணால் மூடப்படுகிறது.

பின் இந்த மூங்கில் கட்டைகளை அதிக வெப்பநிலையில் சுமார் 9 தடவைகள் வைக்கிறார்கள். வெளிப்பகுதியில் களிமண் பூசப்பட்டிருப்பதால் இது எளிதில் தீப்பற்றாது. இந்த செயன்முறையால் உப்பின் தன்மை மாறுபடும்.

இச் செயல்முறைகள் நிறைவுற்ற பின்னர் மூங்கில் உப்பு பல நிறங்களாக மாறும்.

சாதாரண உப்பை மூங்கில் உப்பாக மாற்றுவதற்கு சுமார் 50 நாட்கள் தேவைப்படுகின்றன. இதனாலேயே இந்த உப்பு மிகவும் பெறுமதி வாய்ந்தது.

Share This