பூஜை அறையில் இந்த தவறுகளை செய்யவே கூடாது….நினைவில் கொள்ளுங்கள்

பூஜை அறையில் இந்த தவறுகளை செய்யவே கூடாது….நினைவில் கொள்ளுங்கள்

வீட்டின் பூஜையறை என்பது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். நமது மனதில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் முதலில் நாம் செல்வது பூஜையறையாகத்தான் இருக்கும். அந்த வகையில் மறந்தும் பூஜையறையில் சில தவறுகளைச் செய்யக்கூடாது. அவை குறித்துப் பார்ப்போம்.

வீட்டில் சுவாமி படத்துக்குப் போடப்பட்டிருக்கும் பூ காயும் வரைய அப்படியே விடக்கூடாது. அதேசமயம் பூ காய்வதற்கு முன்பு எடுக்கவும் கூடாது.

விளக்கு ஏற்றிய பிறகு விளக்கில் வெளிச்சம் குறைவாக இருந்தால் திரியை தூண்டி விடலாம் ஆனால் தட்டிவிடக்கூடாது. அவ்வாறு செய்வது அபசகுனமாகப் பார்க்கப்படுகிறது.

பூஜை அறை எப்பொழுதும் வெளிச்சமாக இருக்க வேண்டும்.

இறைவனுக்குப் படைக்கும்போது வெறும் வெற்றிலையை மட்டும் படைக்கக்கூடாது. பாக்கு, பூ ஆகியவையும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

வீட்டில் உணவு உண்ண வைத்திருக்கும் எச்சில் பாத்திரத்தில் நெய் வைத்தியம் வைக்கக்கூடாது.

கையில் விளக்குகளை ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.

அர்ச்சனை செய்யும்போது முழு மலர்களை பயன்படுத்த வேண்டுமே தவிர பூவின் இதழ்களை பயன்படுத்தக் கூடாது.

எப்பொழுதும் இரண்டு விளக்குகளை ஏற்ற வேண்டும்.

பூஜையறையில் நிற்கும்போது அமங்கல வார்த்தைகளை எப்பொழுதும் பயன்படுத்தக் கூடாது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )