வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றார் கமிந்து மெண்டிஸ்

வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றார் கமிந்து மெண்டிஸ்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2024ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார்.

2024 ஆண்டின் வளர்ந்து வரும் வீரரை தேர்வு செய்வதற்காக நான்கு வீரர்களின் குறுகிய பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டிருந்தது. இதில் இரு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரு துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

கமிந்து மெண்டிஸ் தவிர, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன், மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் மற்றும் பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் சயிம் அயூப் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This