ரணில் – சஜித் கூட்டணி சேர்வது நிச்சயமற்றது?

ரணில் – சஜித் கூட்டணி சேர்வது நிச்சயமற்றது?

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் கூட்டணியமைக்க அவ்விரு கட்சிகளின் பிரபல ஐந்து உறுப்பினர்கள் மாத்திரம் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அறியக்கிடைத்துள்ளது.

அதன்காரணமாக, இரு கட்சிகளும் கூட்டணியமைக்கும் செயல்பாடுகளை மேற்கொள்வது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி அமைப்பது மிகவும் நல்ல விடயம் என்றாலும், இரு கட்சிகளும் அதில் உண்மையாக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனவா என்ற கேள்வி உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் ஆலோசகர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்தார்.

மேலும், இந்த விடயத்தில் இரு கட்சிகளின் தலைவர்களிடமிருந்தும் கூட இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This