துன்பம் வரும்போது வயிறு குலுங்க சிரிங்க…
சிரிப்பதால் நம் மனம் மட்டுமல்லாது உடலுக்கும் அதிக நன்மைகள் என கூறப்படுகிறது. ஆனால், நமக்கு இருக்கும் கவலைகளை மறந்து எத்தனை பேர் சிரிக்கிறார்கள் என்றால் அது கேள்விக்குறி தான். அந்த வகையில் வயிறு குலுங்க சிரிப்பதால் உடல் ரீதியாக என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் எனப் பார்ப்போம்.
சிரிப்பு என்பது சிறந்த வலி நிவாரணியாக உள்ளது. நம் உடலில் ஏற்படும் வலியை பொறுத்துக்கொள்ளக்கூடிய சக்தி சிரிப்புக்கு உண்டு.
நன்றாக சிரிக்கும்பொழுது நமது நுரையீரல் செயல்பாடு மேம்படுகிறது. ஒட்சிசனேற்றிகள் திறம்பட செயல்படுகின்றன.
நாம் ஆழமாக சிரிக்கும்போது நமது இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இரத்த நாளங்களின் செயல்பாடு அதிகரிக்கிறது. ஒட்சிசன் அளவை அதிகரிக்கிறது.
12 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிரிக்கும்பொழுது சுமார் 40 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது. எனவே உடல் எடையையும் குறைக்க முடிகிறது.
மனப் பதட்டத்தைக் குறைக்கிறது. சவாலான சூழ்நிலைகளையும் நேர்மறையாக கையாள உதவுகிறது.
நாம் சிரிக்கும்போது வயிறு சுருங்கி விரிகிறது. இது வயிற்று தசைகளுக்கு சிறந்த பயிற்சியாக அமைகிறது.
நமது சிரிப்பு ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தருகிறது. மனம் விட்டு சிரிக்கும்பொழுது சமூகத்தில் சிறந்ததொரு தொடர்பை உருவாக்கிக்கொள்ள முடிகிறது.