வெருகலில் வெள்ளம் வழமைக்கு திரும்பியுள்ளது

மாவிலாறு நீர் திறந்து விடப்பட்டமையால் வெருகலில் ஏற்பட்ட வெள்ளம் மூன்றாவது நாளாக இன்று (24) குறைவடைந்துள்ளதோடு வழமைக்கு திரும்பி வருகிறது.
வெள்ள அனர்த்தம் காரணமாக வெருகல் -மாவடிச்சேனை இந்து மகா வித்தியாலயத்தின் இடைத்தங்கல் முகாமில் இரண்டு நாட்களாக தங்க வைக்கப்பட்டிருந்த 62 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் காலை உணவு வழங்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை (24) காலை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரண்டு நாட்களாக நீர் பரவிச் சென்ற திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியின் மாவடிச்சேனை வீதி இன்று வழமைக்கு வழமைக்கு திரும்பியுள்ளதையும் காணமுடிந்தது
அத்தோடு வெருகல் -மாவடிச்சேனை பகுதியிலுள்ள ஒரு சில வீடுகளில் வெள்ளநீர் இருப்பதையும் காணமுடிந்தது.
வெருகல் சிறி சித்திரவேலாயுதர் சுமாமி தேவஷ்தான வளாகத்திலும் ஓரளவு வெள்ளநீர் காணப்படுகிறது.இருப்பினும் கடந்த இரண்டு நாட்களை விட இன்று வெள்ளம் குறைவடைந்துள்ளது.