அமெரிக்க குடியுரிமை ரத்து உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்த நீதிமன்றம்
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்காவுக்கு வேலைக்காக வந்த தம்பதியர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதிக்குப் பிறந்து குழந்தை பிறந்தால் அதற்கு அமெரிக்க குடியுரிமை கிடையாது எனும் உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவினால் அமெரிக்காவில் வசிக்கும் ஏனைய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மிகுந்த சிரமத்துக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியிருந்தனர்.
எனவே இந்த உத்தரவை எதிர்த்து 22 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடர்ந்தன.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜோன் கோஹனூர், இது என் மனதைக் குழப்புகிறது, இந்த உத்தரவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி இந் நிர்வாக ஆணையை அமுல்படுத்துவதற்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.