நாடாளுமன்ற உணவு கட்டணம் உயர்வு

நாடாளுமன்ற உணவு கட்டணம் உயர்வு

நாடாளுமன்ற உணவகத்திலிருந்து உணவு வாங்கும் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணத்தை 1,550 ரூபாய் அதிகரிப்பதற்கு இன்று (23) கூடிய நாடாளுமன்ற அவைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைகள் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என்று குழுவின் உறுப்பினரான பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்.

அதன்படி, இதற்கு முன்னர் 100 ரூபாயாக இருந்த காலை உணவு தற்போது 600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

300 ரூபாயாக இருந்த மதிய உணவு கட்டணத்தை 1200 ரூபாயாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேநீருக்கான விலை 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This