சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு மீன் ஏற்றுமதியை விரிவுபடுத்துவது குறித்து கவனம்
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதிலும், குறிப்பாக மீன்பிடித் துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இச்சந்திப்பின்போது, பாகிஸ்தான் பிரதமரின் அன்பளிப்பாக ஒரு சிறப்புப் பரிசு உயர்ஸ்தானிகரால் அமைச்சருக்கு வழங்கப்பட்டது.
இது நல்லெண்ணத்தையும் நட்புறவையும் வெளிப்படுத்தும் அடையாளமாக அமைந்தது. மீன்பிடித் துறையில் கூட்டாண்மை முயற்சிகளுக்கான சாத்தியக்கூறுகளை அவர் வலியுறுத்தினார்.
மேலும், இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.