நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘TEST’

நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘TEST’

ஒய் நொட் ஸ்டூடியோஸ் சஷிகாந்த் எழுதி இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் TEST. இப் படத்தில் சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், மாதவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும் மாதவன் பயிற்சியாளராகவும் நடித்துள்ளனர்.

படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் நேரடியாக ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This