டிரம்ப் 75 நாட்களில் செய்யாதவற்றை அநுர 63 நாட்களில் செய்துள்ளார்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனாட்ல் டிரம்ப் 75 நாட்களில் செய்யாத பல விடயங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 63 நாட்களில் செய்துள்ளார். இதனை இலங்கையர்களாக வரவேற்ற அனைவரும் தமது காழ்ப்புணர்ச்சியை கைவிட வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தெடா்ரில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
டொனால்ட் டிரம்ப் ஒரு நாளில் பல கையெழுத்துகளை இட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சில எதிர்க்கட்சி உறுப்பினர்னர் கூறினர். அவர் செய்தது என்ன? உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றியுள்ளார். பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகியுள்ளார். உலகம் வெப்பமடைந்துவருவது தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் உள்ளன. இத்தருணத்தில் அந்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறியுள்ளார்.
டிரம்ப் 75 நாட்களில் செய்யாத பல விடயங்களை ஜனாதபதி அநுரகுமார திசாநாயக்க 63 நாட்களுக்குள் செய்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுபவருக்கு தமது நிர்வாகத்தை அமைத்துக்கொள்ள 75 நாட்கள் அவகாசம் கிடைக்கும். ஆனால், எமது அமைச்சரவை அமைந்து 63 நாட்கள்தான் ஆகியுள்ளன. நாம் அதில் பல வேலைத்திட்டங்களை செய்துள்ளோம்.
எனவே, டிம்பரை வரவேற்கும் நீங்கள் இலங்கையர்கள். எமது ஜனாதிபதி பல வேலைத்திட்டங்களை செய்து முன்னுதாரணமாக உள்ளார். அவரை வரவேற்க வேண்டும். சிறந்தப் பணிகளை செய்பவர்களை வரவேற்றுகும் மனப்பான்மை அவசியமாகும்.” என்றார்.