வயநாடு மண்சரிவு..மாயமான 32 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு

வயநாடு மண்சரிவு..மாயமான 32 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு

கேரளாவின், வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதம் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 263 பேர் உயிரிழந்ததோடு 32 பேர் மாயமாகினர்.

இந்நிலையில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி விரைவில் அவர்களை இறந்தவர்களாக அறிவிக்கவுள்ளதாக கடந்த வாரம் கேரள அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது.

சரியாக ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு விரைவாக அவர்களின் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதோடு அவர்களுக்கு தேவையான நிதியுதவி மற்றும் வீடு ஆகியவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share This