எதிர்வரும் இரு வாரங்களில் பொருட்களின் விலை குறையும்

எதிர்வரும் இரு வாரங்களில் பொருட்களின் விலை குறையும்

மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஏற்ப எதிர்வரும் இரு வாரங்களின் பின்னர் பொருட்களின் விலை குறைவடையும் என அகில இலங்கை சிறு தொழில் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழில் துறையின் மின்சாரக் கட்டணத்தை 30 வீதமாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்ததுடன், இது 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது.

அதன்படி, நேற்று (20) முதல், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான மின்சாரச் செலவுகள் குறைந்துள்ளதாகவும், இதன் விளைவாக, பொருட்களின் விலை 5 வீதம் முதல் 10 வீதம் வரை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சுமார் இரண்டு வாரங்களில் சந்தைக்கு வெளியிடப்படும் என்றும், இதனால் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

Share This