இரு கட்சி ஒன்றிணைவு – பேச்சுவார்த்தைக்கு செயற்குழு அனுமதி

இரு கட்சி ஒன்றிணைவு – பேச்சுவார்த்தைக்கு செயற்குழு அனுமதி

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று (20) கூடியது.

சஹாப் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணியாக எதிர்வரும் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This