போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம்

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம்

இராணுவ வீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, இலங்கை இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 2025 ஜனவரி 20 முதல் 24 வரை மேல் மாகாணத்தில் வசிக்கும் பணியாளர்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் அவயங்களை இழந்த வீரர்கள், காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு ராகம, ரணவிரு செவன நலவிடுதி வளாகத்தில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் மேற்பார்வையிடப்படும் இந்த மருத்துவ முகாம், தொடர்ச்சியான மருத்துவப் பிரச்சினைகளை மதிப்பிடுவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும், தொழில்சார் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்கும், செயற்கை கால்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கான சோதனைகளை நடாத்துவதற்கும், பல் சேவைகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை சேவைகள் மற்றும் உணவுமுறை ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Share This