19 நாட்களில் 8 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு
இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று (20) காலை வரையிலான 19 நாட்களில் 8 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களுள் நால்வர் திட்டமிட்ட குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 5 பேர் காயமடைந்தனர்.
நேற்று பிற்பகல் கலஹா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.