துரதிர்ஷ்டத்தை துரத்தும் எலுமிச்சை
எலுமிச்சை பழத்தை வெறும் பழமாக மட்டும் நாம் நினைத்திருப்போம். ஆனால், உண்மையில் எலுமிச்சைப் பழத்தில் நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை விஷயங்கள் விலகும்.
அதன் காரணமாகத்தான் கண் திருஷ்டி, மாந்திரீகம் போன்றவற்றுக்கு எலுமிச்சப்பழம் பயன்படுகிறது.
எலுமிச்சைப் பழத்தை அரைவாசியாக வெட்டி அதில் ஒரு பக்கத்தில் குங்குமமும் மறு பக்கத்தில் மஞ்சலும் தடவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை வாசலில் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வது நன்மையளிக்கும்.
மேலும் எலுமிச்சைப் பழத்தை வலது மற்றும் இடது பக்கம் சுற்றி காலில் போட்டு நசுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பட்சத்தில் கண் திருஷ்டி சரியாகும்.
அதேபோல் கடைகளில் ஒரு கண்ணாடி க்ளாஸில் எலுமிச்சைப் பழத்தைப் போட்டு வைத்திருப்பார்கள். எலுமிச்சைப் பழம் சற்று மேலாக இருந்தால் அந் நாள் மிகவும் சிறப்பான நாளாக அமையும். அதுவே உள்ளே சென்றால் அதுவொரு சாதாரண நாள்.
கோயிலில் வழங்கப்படும் எலுமிச்சைப் பழத்தை சுப காரியங்களின்போது உடன் எடுத்துச் சென்றால் அக் காரியம் வெற்றியடையும்.
11 எலுமிச்சைப் பழங்களை வாங்கி துர்கை அம்மன் அல்லது காளியம்மன் கோயிலில் வைத்து பிரார்த்தித்து பின்னர் அதிலொரு எலுமிச்சையை வலது பக்கம் மூன்ற தடவைகள் இடது பக்கம் மூன்று தடவைகள் சுற்றிவிட்டு சூலத்தில் குத்த வேண்டும்.
அதேபோல் இன்னொரு எலுமிச்சையை வலப்பக்கம் மூன்று தடவைகள் இடப் பக்கம் மூன்று தடவைகள் சுற்றி இடது குதிக்காலில் போட்டு மிதிக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும்போது நேர்மறை ஆற்றல் உங்களை ஆட்கொள்ளும்.