மின் கட்டண குறைப்பு நிலுவையில்!
நிதி அமைச்சின் பரிந்துரையின்படியே மின் கட்டண நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவது தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பிரதான சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மேற்பார்வை அதிகாரம் நிதி அமைச்சரிடமே உள்ளதாகவும் மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைப்பது நிதி அமைச்சரின் பரிந்துரையின் கீழ் இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மலிவு விலையில் மின்சாரக் கட்டணம் நிறுவப்பட வேண்டும் என மின்சார சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகிய இரு நிறுவனங்களும் நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.
அனைத்து மின் நுகர்வோருக்கும் சலுகையாக மின் கட்டணமானது 20 வீதத்தால் குறைக்கப்பட்டது.
கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த மின் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.