வேர்வை வெற்றி தரும்…டைட்டில் வின்னர் ஆனார் முத்து
பிக்பொஸ் சீசன் 8 நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது.
அதில் முத்துக்குமரன் முதலாவது பரிசைத் தட்டிச் சென்று இந்த சீசனின் வெற்றியாளராக முடி சூட்டிக் கொண்டார்.
சுமார் 24 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே விளையாட்டுகள், வீட்டுக்கான வேலைகள் என அனைத்திலும் முனைப்புடன் ஈடுபட்டதோடு, விளையாட்டை இப்படியும் விளையாடலாம் என்ற ஒரு புது யுக்தியைக் கையாண்ட பெருமை முத்துக்குமரனுக்கு உரியது.
மேடைப் பேச்சாளராக உள்ளே வந்து மக்களின் மனதை தனது அழகு தமிழால் கவர்ந்தார் என்பது அவரது பெருமை.
வீட்டுக்குள் அனைவரையும் அரவணைத்து பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து, தனக்கெதிராக சக போட்டியாளர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களையும் உள்வாங்கி ஒவ்வொரு நாளும் தன் பிழைகளைத் திருத்திக் கொண்டு, இன்று டைட்டில் வின்னர் எனும் அந்தஸ்த்தை தன்னகப்படுத்தியுள்ளார்.
அதிலும் எந்தவொரு ரிஸ்க்கையும் முதல் ஆளாக அசால்ட்டாக எடுப்பதில் கை தேர்ந்தவர்.
பணப்பெட்டி சுற்றில் எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஓடிச் சென்று முதல் ஆளால் பெட்டியைக் கைவசப்படுத்தினார்.
அந்த வகையில் வெற்றியாளர் எனும் சொல்லுக்கு மிகப் பொருத்தமானவர் முத்துக்குமரன்.