சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான விக்டர் ஐவன்( Victor Ivan) நேற்று காலமானார்.

இவர் இலங்கையின் முதலாவது புலனாய்வு வார இதழான ராவய வார இதழின் வௌியீட்டாளராகவும், ஆசிரியராகவும் அவர் கடமையாற்றியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

அதன் பின் ராவய பத்திரிகை வௌியீடு நிறுத்தப்பட்ட பின்னரும், அவர் இலங்கையின் அரசியல் மற்றும் ஊடகத்துறையில் தாக்கம் செலுத்தக்கூடிய முக்கிய நபராக மாறியிருந்தார்.

தொடர்ந்து 1971ஆம் ஆண்டின் ஜே.வி.பி. முதலாவது கிளர்ச்சியில் லொகு அதுல எனும் புனைப் பெயரில் பங்குகொண்ட விக்டர் ஐவன், அதன் பின்னர் 1985களில் ராவய எனும் சிங்கள புலனாய்வு வார இதழொன்றை ஆரம்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று சுகவீனம் மற்றும் முதுமை காரணமாக தனது 75வது வயதில் அவர் காலமானார்.

Share This