கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மூடப்படுகின்றது
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (20) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் உள்ள பாடசாலைகளி தற்போது பரீட்சைகள் நடைபெற்று வருவதால், நாளை இடம்பெறவுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி, சனிக்கிழமை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மோசமான வானிலை காரணமாக சம்பந்தப்பட்ட பாடசாலைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.