தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கடந்த பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல்களில் இடம்பெற்றிருந்த 74 வேட்பாளர்கள் தங்கள் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியதால், அவர்கள் மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலதிக தேர்தல் ஆணையர் (சட்டம்), சட்டத்தரணி சிந்தக குலரத்ன கூறியுள்ளதாவது, வேட்பாளர் பட்டியலை பொலிஸாரிடம் ஒப்படைக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை இதன் ஊடாக எடுக்கப்படும்.
இதேவேளை, செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத நூற்று முப்பத்து நான்கு அரசியல் கட்சிகள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக சிந்தக குலரத்ன தெரிவித்தார்.