பெருந்தொகை போதைபொருளுடன் இருவர் கடற்படையினரால் கைது

பெருந்தொகை போதைபொருளுடன் இருவர் கடற்படையினரால் கைது

கல்பிட்டி நகரப் பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 800 போதைபொருள் அடங்கிய மாத்திரைகளுடன் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையானது கல்பிட்டி பொலிஸாருடன் வடமேற்கு கடற்படை கட்டளையினரால் முன்னெடுக்கப்பட்டது.

கல்பிட்டி நகரில் சந்தேகத்தின் பேரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை சோதனையிட்டதில் 800 மருந்து மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்படி, இந்த சட்டவிரோத செயலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள், கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 49 வயதுடைய கல்பிட்டி புதுக்குடியிருப்பு மற்றும் எத்தலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Share This