மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும்
மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டது.
அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் 6 ரூபாவிலிருந்து 4 ரூபாயாகவும் , 31-60 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் 9 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும் குறைக்கப்படும்.
இந்த விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.