ஒன்றரை மணித்தியாலத்தின் பின் சிஐடியில் இருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ

ஒன்றரை மணித்தியாலத்தின் பின் சிஐடியில் இருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ

இன்று முற்பகல் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர்  அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று காலை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This