கோட்டாபய சிஐடியில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்பு அவர் கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அலுவலகத்துக்கு வருகைதந்தார்.
கதிர்காமத்தில் உள்ள சொத்தின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற சிஐடி விடுத்த அழைப்பின் பேரிலேயே கோட்டாபய ராஜபக்ச, ஆஜராகியுள்ளார்.