மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கை இன்று!
மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று வெளியிடப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்வதாக இருந்தால் அது திருத்தப்படும் வீதம் குறித்த அறிக்கையில் சேர்க்கப்படும் என்று ஆணையம் கூறுகிறது.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கணிப்பு நேற்று நிறைவடைந்தது.
ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுக் கருத்துரை கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.