விஜித் விஜதமுனி சொய்சா பயன்படுத்திய ஜீப் வண்டி சட்டவிரோதமானது?

விஜித் விஜதமுனி சொய்சா பயன்படுத்திய ஜீப் வண்டி சட்டவிரோதமானது?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளராக கடமையாற்றிய விஜித் விஜதமுனி சொய்சா பயன்படுத்திய ஜீப் வண்டி சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஜீப் வண்டியானது, கடந்த டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வலானை குற்றத் தடுப்பு பிரிவினரால் ஹப்புத்தளை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனைத் தொடர்நது இது தொடர்பில் பண்டாரவளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, இது தொரட்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விஜித் விஜதமுனி சொய்சா கடந்த 14ஆம் திகதி வலானை குற்றத் தடுப்பு பிரிவுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அதற்காக அவர் இரு சட்டத்தரணிகள் மூலம் ஆஜராகியுள்ளார்.

எவ்வாறாயினும், அதன்போது அவரிடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் திடீர் சுகயீனத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதன் காரணமாக, குறித்த வாகனம் தொடர்பில் காரணிகளை முன்வைப்பதற்காக அவருக்கு வேறொரு தினத்தில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This