டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் படைத்த புதிய சாதனை
தனது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி பகுதியில் இருக்கும் பிரபல டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் மற்றொரு சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இதன்படி, கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய செர்பிய வீரர் என்ற சாதனையை நோவக் ஜோகோவிச் முறியடித்துள்ளார். இதுவரை அவர் 430 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் இரண்டாவது சுற்றில் விளையாடிய ஜோகோவிச் போர்ச்சுகலின் ஜேமி ஃபரியாவை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஜோகோவிச் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை (24) வென்றுள்ளதுன் 37 முறை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஆடவர் பிரிவில் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரெஸும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 21 வயதான அல்காரெஸ் ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவை தோற்கடித்திருந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் பிரான்சின் அல்பானா ஆலிவெட் ஜோடி முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.