டிசம்பர் மாதத்திற்கான ஐசிசி விருதை தனதாக்கினார் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 டிசம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி சிறந்த வீரராக செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர் டேன் பீட்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எனினும், அவர்கள் இருவரையும் பின்தள்ளிய பும்ரா சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பந்துவீச்சில் 14.22 என்று அளவில் சராசரி வைத்திருந்த பும்ராவுக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது
இந்த தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். அது மட்டும் இல்லாமல் உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றிருந்தார்.
இந்த தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 200வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமை கிடைத்தது.
மேலும், குறைந்த பந்துவீச்சு சராசரியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையும் பும்ராவுக்கு கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக தான் அவருக்கு சிறந்த வீரர்களுக்கான விருது கிடைத்திருக்கிறது.