கரையோர பிரதேசங்களில் பலத்த காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நாட்டின் கரையோர பிரதேசங்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (14) காலை 6:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (15) காலை 6:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்குச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவும், மணிக்கு (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
எனவே, இது தொடர்பில் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.