இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபெண்டர் வாகனம் விபத்து

இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபெண்டர் வாகனம் விபத்து

கொழும்பு துறைமுக நகரின் மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (11) மாலை இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபெண்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், சாரதி உட்பட மூன்று இராணுவத்தினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த டிஃபென்டர் கார் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதுபார்க்கப்பட்டுள்ளது.

சாரதி சோதனைக்காக எடுத்துச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து காரணமாக டிஃபென்டர் காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.

கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This