தமிழக மீனவர்கள் எட்டு பேர் கைது
தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றி 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் என தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ராமேஷ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முகேஷ்குமார், மரிய ரெட்ரிக்ஷன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளில் களஞ்சியம், முனிஸ்வரன், கார்மேகம், கண்ணன், பிரியன், சவேரியார் அடிமை, மரிய ஜான் ரெமோரோ, பிரிஸ்மன் ஆகிய 8 மீனவர்கள் வடக்கு மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை கைது செய்தனர்.
8 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
கடந்த 2024-ம் ஆண்டு 72 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 554 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.