தனது பணிகளை ஆரம்பித்தார் தலதா அத்துகோரள

தனது பணிகளை ஆரம்பித்தார் தலதா அத்துகோரள

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியின் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

இன்று சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் அவர் உத்தியோகபூர்வமாக தமது பணிகளை ஆரம்பித்தார்.

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் அவர் அண்மையில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னர் பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This