சொகுசு பஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி

சொகுசு பஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் பாதுகாப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு அமைய சொகுசு பஸ்கள் கட்டுநாயக்க விமான நிலைத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

187 வழித்தடத்தில் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பஸ்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கு விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது. என்றாலும், விமான நிலையத்தில் தரித்து நின்று பஸ்கள் சேவையை இயக்க முடியாது எனவும் குறித்த நிறுவனம் கூறியுள்ளது.

 

Share This