17 மாத காலப்பகுதியில் 548 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தாமதம்
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2023ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையிலான 17 மாத காலப்பகுதியில் 548 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தாமதமாகியுள்ளதுடன் 3 மணி நேரம் முதல் 59 மணி நேரம் வரை தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
அதன்படி, 2022/2023 நிதியாண்டில் விமான தாமதங்கள் மற்றும் இடையூறுகள் காரணமாக விமான நிறுவனத்திற்கு ஏற்பட்ட மொத்த செலவு 784,000 அமெரிக்க டொலர்கள் என்றும் தணிக்கை அறிக்கை கூறுகிறது.
மாற்று விமானங்களை சரியான நேரத்தில் பெறத் தவறியது, விமான உதிரி பாகங்களைப் பெறுவதற்கு நீண்ட நேரம் எடுத்தது மற்றும் நிறுவனத்தின் பணப்புழக்க நிலைமை ஆகியவை இந்த தாமதங்களுக்கு முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டன.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க பல தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் நிர்வாகம் தணிக்கைக்கு தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல், 2023/2024 நிதியாண்டுக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.