பொதுமக்களை அச்சுறுத்திய 15 அடி நீளமுடைய முதலை
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்கள் அச்சுறுத்திய முதலை 15 அடி பாரிய இராட்சத முதலை வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது.
இன்று (09) காலை மட்டக்களப்பு மாமாங்கம் மாமேங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதி பகுதியில் சுமார் 15 அடி நீளமுடைய முதலை ஒன்று பொது மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால் பிடிக்கப்பட்ட முதலை தொடர்பாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்துக்கு வருகை தந்த அதிகாரிகள் முதலையினை கொண்டு செல்வதற்கான நடவடிக்கை முன்னெடுத்தனர்.
குறித்த பகுதியில் அண்மைக்காலமாக முதலைகளின் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
முதலை பிடிக்கப்பட்ட பகுதியில் மாமாங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம் என்பன இருப்பதனால் முதலைகள் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக பொதுமக்களினால் கவலை தெரிவிக்கப்பட்டது.