மாஸ் காட்டும் புஷ்பா 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ…
சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் ஆகியோர் நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா 2.
இத் திரைப்படம் இதுவரையில் 1850 கோடி வசூல் சாதனை செய்த நிலையில் விரைவில் 2000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இத் திரைப்படத்து தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருந்தார்.
இதன் முதல் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு பாடல்களும் வைரலானது.
இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.