அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்காக சட்டத்தரணி அலுவலகம்

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்காக சட்டத்தரணி அலுவலகம்

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இன்று, மக்கள் அன்றாடம் வாழ முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் நியமிக்கப்பட்ட அரசாங்கம்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனே எரிபொருள், மின்சார கட்டணத்தை குறைத்து, ஆண்டுக்கு இருமுறை ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் உயர்த்தும் என்று நினைத்தோம்.

இன்று பல இடங்களில் அரசியல் பழிவாங்கல்கள் மெல்ல மெல்ல அரங்கேறி வருகின்றன.

இது போன்று அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக இன்னும் ஓரிரு நாட்களில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம்” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )