தொழிலாளர் தினத்தன்று வெளியாகிறதா சூர்யாவின் ரெட்ரோ?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச், சூர்யாவின் 2டி நிறுவனங்கள் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள அவரது 44 ஆவது திரைப்படம் ரெட்ரோ.
இப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இத் திரைப்படம் காதலுடன் சேர்ந்த எக்ஷ்ன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இத் திரைப்படம் மே 1 ஆம் திகதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.