ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம்

ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம்
கொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம்  இன்று 8 ஆம் திகதி புதன்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம் பெற்றது.
 கொலை செயய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்  ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் ஒழுங்குபடுத்துதலில் இவ் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த அமரர் லசந்த விக்கிரமமதுங்கவின் திருவுருவப் படத்திற்கு மூத்த ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் மற்றும் முன்னாள் பிரதி மேயர் சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா அரியனேந்திரன் மற்றும் மட்டுமாவட்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இணைந்து  மலர்மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில்  கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் அடக்காதே அடக்காதே ஊடகங்களை அடக்காதே போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர்
இன் நினைவேந்தலானது காலை 10.30மணியிலிருந்து 11:30 மணி வரை இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Share This