இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளை தகர்த்துக்கொண்டு உள்ளே சென்ற ஓட்டோ – வசாவிளானில் இன்று அதிகாலை பரபரப்பு

இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளை தகர்த்துக்கொண்டு உள்ளே சென்ற ஓட்டோ – வசாவிளானில் இன்று அதிகாலை பரபரப்பு

வசாவிளான், குட்டியப்புலம் பகுதியில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளைத் தகர்த்துக் கொண்டு உள்ளே சென்ற ஓட்டோவால் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ். வலிகாமம் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை வேளை பயணித்த ஓட்டோவே இவ்வாறு இராணுவத்தினரின் தடுப்பு வேலிகள், அலங்காரத்  தொட்டிகளைத் தகர்த்து உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது.

இதன்போது காவல் பணியில் இருந்த இராணுவச் சிப்பாய் பதற்றமடைந்து ஓடிச் சென்றார்.

தெரு நாய் ஒன்று ஓட்டோவின் குறுக்கே சென்றபோது அதனை விலகிச் செல்ல முற்பட்ட சமயமே இந்த விபத்து இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில் ஓட்டோ கடும் சேதமடைந்தது. எனினும், அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயர் தப்பினர்.

Share This